வெளிநாட்டில் இருந்து மீட்பு – நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை..!

Scroll Down To Discover

கும்பகோணம் அருகே சிவபுரம் கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டு, 1987 ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட சிலை, 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப உள்ளது.

கும்பகோணம் அருகில் உள்ள சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான
நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டது. பல்வேறு
கட்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சிலை 1987 ஆம் ஆண்டு இந்தியா
கொண்டுவரப்பட்டது.

இந்தியா கொண்டுவரப்பட்ட இந்த சிலை,  சிவபுரம் சிவகுருநாத சுவாமி ஆலயத்திற்கு  கொண்டு செல்லப்படவில்லை. அதனை தொடர்ந்து, சிவபுரம் கிராம மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று (நவ.27) சிலை திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து பாதுகாப்பாக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை.  ஐம்பொன் நடராஜர் சிலையானது இன்று ஒருநாள் சிவபுரம் கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் எனத் தகவல்