வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்.

Scroll Down To Discover

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வீரப்பன் மகள் வித்யா ராணி, பாமக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார், அர்ஜூனன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் பேசிய முரளிதரராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மோடியின் கைப்பாவை என ஸ்டாலின் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் பேசிய தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ்:- திமுக தலைவர் ஸ்டாலின் தான் பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கானுக்கு கைப்பாவையாக இருப்பதாகவும், தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.1947ல், பாகிஸ்தானில், 24 சதவீத இருந்த ஹிந்துக்கள், தற்போது, 1 சதவீதமே உள்ளனர்.இந்தியாவில், மசூதிகளின் எண்ணிக்கையை நினைத்து பார்க்க வேண்டும்.தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பதாக, ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயார். பாஜக இருக்கும் வரை, ஸ்டாலின் முதல்வராக முடியாது.முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக, ஸ்டாலின் பொய் கூறுகிறார்.