வீரத்துறவி இராம ராமகோபாலனுக்கு முதலவர் பழனிச்சாமி, திமுக. தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் முருகன், உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்.!

Scroll Down To Discover

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன்,94 உடல் நல குறைவு காரணமாக இன்று முக்தியடைந்தார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ராமகோபாலனுக்கு, கடந்த 27ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை ராமகோபாலன் உயிரிழந்துள்ளார்.


அவருக்கு பாஜக மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன. பாஜக தமிழக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக பாஜக சார்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


முதலவர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டதோடு இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் ராமகோபாலன் திகழ்ந்தார் என தெரிவித்துள்ளார்.அவர்களது பிரிவால்வாடும் அவரது இயக்கத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆழ்ந்தஆன்மிகவாதியும், சமய கருத்துக்களை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியுமான ராமகோபாலன் மறைவு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.