வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் மற்றும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Scroll Down To Discover

உத்தரபிரதேசத்தின் ஜீவரில் வரவிருக்கும் சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள பல்வேறு திட்டங்களுக்கு ரூ .4000 கோடிக்கு மேல் நிதி உதவி வழங்குவதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் மற்றும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தல், தொழில்துறை வளாகங்களின் வளர்ச்சி, மின்னணு நகரம், வீட்டுத் திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை இதில் அடங்கும்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் (ஹட்கோ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், திரு. எம்.நாகராஜ் மற்றும் யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (யீடா) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அருன்பீர் சிங் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது