வீட்டுக்குள் புகுந்த உடும்பு : பிடித்த தீயணைப்புத் துறையினர்.!

Scroll Down To Discover

மதுரை அனுப்பானடியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.மதுரை அனுப்பானடி சேர்ந்த கணேசன் குடியிருந்து வருகிறார்.

அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது சுமார் 3 அடி நீளம் கொண்ட உடும்பு ஒன்று கழிவறைக்குள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடும்பு தப்பிக்கா அளவிற்கு கதவை மூடி வைத்து பின், அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரை அனுப்பானடி தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி மூன்று அடி நீளமுள்ள உடம்பை பிடித்தனர் கூண்டுக்குள் அடைத்த உடும்பை மதுரை உள்ள வன அலுவலர்களிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உடம்பை பத்திரமாக கொண்டு விட்டனர். குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் உடும்பு வந்தது பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.