விவோ இந்தியா நிறுவனம்: 119 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பறிமுதல் – அதிரடி நடவடிக்கை.!

Scroll Down To Discover

விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து அமலாக்கத்துறை ரூ.465 கோடி பறிமுதல் செய்துள்ளது.

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியாவில் வேகமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கியமான இடத்தையும் பிடித்துள்ளது.

விவோ செல்போன் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்தியது. அதில், விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியதும் இதில் தெரிய வந்தது.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த விவோ, அதில் 50 சதவீதம் வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியுள்ளது.

இதனையடுத்து விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. 119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், 66 கோடி நிரந்தர வைப்புத்தொகையும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.