சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் ஆரம்ப சுகாதார மையமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை, கல்லூரி முதல்வர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் விலங்கியல் துறைத்தலைவர் சண்முகவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி மனோஜ்பாண்டியன், மேலக்கால் வட்டார மருத்துவர் கிஷாமகேஷ், மருத்துவ ஆய்வாளர் பிரபாகரன்,மற்றும் சோழவந்தான் வட்டார மருத்துவ ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரகு, ராஜ்குமார், அசோக்குமார், தினகரன், ரமேஷ்குமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீனிமுருகன், பிரேம் ஆனந்த், மோகன்ராஜ், மாரிமுத்து ஆகியோர் முகாம் பணியினை கவனித்தனர். தகுதியுள்ள 160 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
செய்தி : ரவிசந்திரன்
Leave your comments here...