விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தில் விவசாயம் செய்திடும் வகையில் இணைய வழி பயிற்சி முகாம்..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் சேமிப்பு நடவடிக்கையாக, நுண்ணீர் பாசனம் செய்வது குறித்து இணைய வழி பயிற்சி மேலூர் விநாயகபுரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது,

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்ட இந்த பயிற்சி முகாமில், மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமையில், துணை இயக்குநர்கள் சிவஅமுதன், சரவணன், வட்டார உதவி இயக்குநர் செல்வி, ஆகியோர் கலந்துக்கொண்டு, இந்த நுண்ணீர் பாசனம் மூலம், செடிகளின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் அளித்து அதிக மகசூல் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் இணைய வழியாக விளக்கம் அளிக்கப்பட்டது..

செய்தி: Ravi Chandran