விவசாயிகளிடமிருந்து ரூ 2.9 லட்சத்திற்கு தேங்காய் நேரடி ஏலம்.!

Scroll Down To Discover

மேலூர் விநாயகபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி, விவசாய அதிகாரி, வெங்கடேசன் ஆகியோர் தலைமையில், தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.

மேற்பார்வையாளர் கருப்பையா மறைமுக ஏலம் குறித்து விளக்கி கூறினார். விவசாயிகள் கொண்டு வந்த 16 ஆயிரத்து 54 தேங்காய்களில் ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ .16 க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தொகை 2 .9 லட்சம் ரூபாய் விவசாயிகளிடம் வழங்கப்பட்டது.

மதுரை கோவை சேலம் விருதுநகர் சிவகங்கை போன்ற பல மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.