விருதுநகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்திகளில், “விருதுநகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது எண்ணங்களால் துணை நிற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் நம்புகிறேன். விபத்து ஏற்பட்ட இடத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அரசு அதிகாரிகள் முழுமூச்சாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
https://twitter.com/PMOIndia/status/1360179884233019392?s=20
விருதுநகர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, கருணைத் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Leave your comments here...