விருதுநகர் போலீஸ் பாலம் அருகில் உள்ள 2 கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மேற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆய்வாளர் கார்த்திக்செல்வம் தலைமையில் போலீசார், அந்தப்பகுதியிலிருந்த கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாலன் நகர் பகுதியைச் சேர்ந்த குருரட்சகன் (24), விக்னேஷ்ராஜ் (25) இருவரது கடையிலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Leave your comments here...