சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல்
பெங்களூரில் உள்ள வருவாய் புலனாய்வு துறையினர் அளித்த தகவலின் படி சார்ஜா செல்லவிருந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்று இடைமறித்து பரிசோதனை செய்தனர்.
அப்போது அவரது உடமைகளிலிருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பயணி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...