விமான போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் : விமான நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: விமான நிலைய ஆணைய தலைவர்

Scroll Down To Discover

2020 நவம்பர் 23 முதல் 27 வரை அனுசரிக்கப்படும் விமான போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் 2020, இந்திய விமான நிலைய ஆணையத்தால் இன்று தொடங்கப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்தால் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் மற்றும் இதர வசதிகளில் விமான போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.


இது குறித்து பேசிய இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அரவிந்த் சிங், தங்களது மண்டலங்கள் மற்றும் நிலையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய மண்டல இயக்குநர்கள் மற்றும் விமான நிலைய இயக்குநர்கள் துடிப்புடன் செயல்பட்டு போதுமான நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.

கொவிட் காரணத்தால் விமான போக்குவரத்து குறைந்திருந்த போதிலும், விலங்குகள் மற்றும் பறவைகளின் தொல்லை விமான நிலையங்களில் அதிகரித்து காணப்பட்டதாக சிங் கூறினார்.விமான போக்குவரத்தின் அளவை பற்றி கவலைப்படாமல் பாதுகாப்பை அனைத்து விமான நிலையங்களிலும் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.