விஜய்-க்கு எதிரான போராட்டம் தேவையற்றது : பாஜகவில் சேர்ந்த சேர்ந்த இயக்குனர் ட்வீட்..!

Scroll Down To Discover

நடிகர் விஜய்-க்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த சேர்ந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.இவர் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்தார்.


பிகில் திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம், ஆகியோருக்கு சொந்தமான வீடு, பிகில் பட விநியோகஸ்தர் ஆகியோரின் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, நீலாங்கரையில் உள்ள வீடு, பனையூர் வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.சோதனை முடிந்து நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த பாஜவினர், நடிகர் விஜய்யின் படப்பிடிப்பை அங்கு நடத்தக் கூடாது என்று போராடத்தில் ஈடுபட்டனர். அங்கு விஜய் ரசிகர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் பாஜகவில் இணைந்து உள்ள இயக்குனர் பேரரசு டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார். அதில்: –

https://twitter.com/ARASUPERARASU/status/1225825977013395457?s=20

நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக வினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல! இந்தமாதரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெருப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு.என்று கூறியுள்ளார்.