விஜயரகு கொலை : கேராளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிஹாத் கலச்சாரம் பரவுகிறதா..?

Scroll Down To Discover

திருச்சியைச் சேர்ந்த பாஜக. பிரமுகர் விஜயரகு சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது பெண்ணை ஒருதலையாக காதலித்த முகமது பாபு 20 என்பவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து காந்தி மார்க்கெட்டில் இருந்த விஜயரகுவை கத்தியால் குத்தி கொலை செய்தார். விஜயரகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார்.


இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி மார்க்கெட்டில் கடையடைப்பு நடத்த முயன்றபோது போராட்டம் நடத்தக்கூடாது என விஜயரகு ‘போஸ்டர்’ ஒட்டியுள்ளார். கேரளாவின் ‘லவ் ஜிகாதி’ போல் விஜயரகுவின் பெண்ணுக்கும் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. விஜயரகுவை கொலை செய்துள்ளனர். இஇதுகுறித்த முழுமையான அறிக்கை பட்டியலின நல தேசிய ஆணையத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது திருச்சி கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் வேதரத்தினம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்