மதுரை விளாச்சேரியில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக கொரோனா இரண்டாம் அலையால் மதுரையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் உதவி கேட்டதால் 200 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சுமார் ரூபாய்.2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நமது அறக்கட்டளைக்கு உதவக்கூடிய நல்ல உள்ளங்களின் உதவியுடனும், மாவட்ட ஆட்சியர் அனுமதியுடனும், 4 இடங்களில் (எஸ்.எஸ். காலணி, செல்லூர், பீ பீ குளம், மதிச்சியம் )சமூக இடைவெளியை பின்பற்றியும் வழங்கப்பட்டது.
இதில், ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நிர்வாக இயக்குனர் மரு.ரா.பாலகுருசாமி . மணிக்குமார் காவல்துறை உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மளிகை பொருட்களை அனைவருக்கும் வழங்கினர். அதை பெற்றுக்கொண்டு , உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , நமது அறக்கட்டளைக்கும் நன்றி தெரிவித்தனர்.
Leave your comments here...