வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் ” அபியாஸ்” என்ற அதிவேக விமான வாகனத்தை வடிவமைத்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இதன் சோதனை இன்று (ஜூன் 29)ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து (ஐடிஆர்) வானில் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கியது
Leave your comments here...