மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பஸ்நிலையம் சீரமைத்து புதிய வணிகவளாகத்ஙகள் கட்டப்பட்டதை காணொலி காட்சிமூலம் மதுரையில் தமிழகமுதல்வர் எடபாடி பழனிச்சாமி டிசம்பர் 4ந்தேதி திறந்துவைத்தார்.
அந்த கட்டுமான பணி முடிக்கப்பட்ட பஸ்நிலையத்தையும், தாதம்பட்டி மந்தையில் துர்நாற்றம் வீசி செடி,கொடி முட்புதர்களில்
சூழப்பட்டு கழிவுநீர்குளமான ஒட்டான்குளத்தினை மாணிக்கம் எம்.எல்.ஏ., முயற்சியில் ரூ.1கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட நடையாளர்பாதையுடன் கூடிய பூங்காவையும் பேரூராட்சி இயக்குநர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன், மாணிக்கம் எம்.எல்.ஏ., உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல்அலுவலர் சிவக்குமார், இளநிலை பொறியாளர் கருப்பையா, கூட்டுறவு சங்கதலைவர் வக்கீல்கார்த்திக், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கொரியர் கணேசன் ஆகியோர் வந்திருந்தனர்.
Leave your comments here...