வாகன தகுதி சான்று புதுப்பித்தல் : டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..!

Scroll Down To Discover

வாகனங்களின் தகுதி சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அனுமதி சீட்டு பெற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பொது போக்குவரத்துக்கான சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் ஏற்கனவே அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதுவே கடைசி நீட்டிப்பு என்ற நிபந்தனையுடன் ஆணையிடப்பட்டதாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.