வாகன சோதனையில் 3,650 கிலோ போதை பொருளை போலீசார் பறிமுதல்.!

Scroll Down To Discover

தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். போலீஸ் சூப்பிரெண்டு சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர்.

அதில் வந்தவர்கள் முரணான பதிலை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து, நடந்த சோதனையில் வாகனத்தில் மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதை பொருள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.7.30 கோடி என கூறப்படுகிறது.
https://twitter.com/ANI/status/1420556024205832197?s=19
இதனையடுத்து 2 லாரிகளையும் போலீசார் சோதனையிட்டு போதை பொருட்களை பறிமுதல் செய்து, வாகனங்களையும் கைப்பற்றி உள்ளனர். அந்த வாகனங்களில் இருந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து முடங்கியது. எனினும், சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, ஆயுதம், தங்கம் போன்ற பிற கடத்தல் சம்பவங்களை போல் நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன