வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கலாம் – மத்திய அரசு அனுமதி

Scroll Down To Discover

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள், தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் தொற்றின் 2வது அலை காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழந்தும் ஊதியக் குறைவால் அவதிப்பட்டும் வருகின்றனர்.

இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகையில் குறைவான முன்பணத்தை எடுத்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளது.