வரலாற்றில முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

Scroll Down To Discover

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது.

மதுரை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்கு நம் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் வந்து அன்னையை தரிசனம் செய்து செல்கின்றனர். சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி இன்று காலை 9:05 முதல் 9: 30 மணிக்குள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இந்த வைபவத்தை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org-ல் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.