வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்..முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Scroll Down To Discover

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள்: முதல் அமைச்சர் கடும் கண்டனம்வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்.

சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது. வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.