லாரியில் கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள சோலார் பேனல்கள்..!

Scroll Down To Discover

மதுரை புற வட்டச் சாலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை, மதுரை வணிகவரித்துறை புலனாய்வு குழுவினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சோலார் பேனல்கள் பில் இல்லாமல், வரி ஏய்ப்பு செய்து கடத்திவரப்பட்ட தெரியவந்துள்ளது. இதையடுத்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கண்டெய்னர் லாரியை நிறுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியில் உள்ள சோலார் பேனல்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது, என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வரப்படுகிறது. தொடர்ந்து, போலீசாரும் வணிகவரி துறையினரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி : ரவிசந்திரன்