லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி

Scroll Down To Discover

சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், லாட்டரி அதிபர் மார்ட்டின். இவருக்கு சென்னை, கோவையில் வீடு உள்ளன. லாட்டரி விற்பனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் மார்ட்டினுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.


இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் மார்ட்டினின் ரூ.457 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.