லயன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா..!

Scroll Down To Discover

தஞ்சை மாவட்டம்,பேராவூரணி பெரியகுளத்தின் மையப்பகுதியில் லயன்ஸ் கிளப் மற்றும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய குறுங்காடு அமைத்து, மரக்கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.

விழாவுக்கு, லயன்ஸ் கிளப் தலைவர் கோவிதரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டார். பேராவூரணி பெரிய குளத்தின் மையப்பகுதியில் குறுங்காடு அமைத்து, அதில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 250 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளான, வேம்பு, மா, பலா, புங்கன், ஈட்டி, சொர்க்கம், வாகை ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் கைஃபா நிர்வாகிகள் கார்த்திகேயன், நிமல்ராகவன், தங்கக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் செயலாளர் ஜீ. ராஜா, பொருளாளர் சிவநாதன், நிர்வாக அலுவலர் ஆனந்தன், கிளப் உறுப்பினர்கள் குட்டியப்பன், ஆதித்யன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.