லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தின மற்றும் பொறியாளர் தின விழா.!

Scroll Down To Discover

பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தின மற்றும் பொறியாளர் தின விழா நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் கோவிதரன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் கனகராஜ், வட்டாரத் தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் செயலாளர் ஜீ.ராஜா வரவேற்றார்.

பேராசிரியர் சையதுஅகமதுகபீர் புதிய உறுப்பினர்களை கிளப்பில் இணைத்து வைத்து பேசினார். தலைமை ஆசிரியர் மற்றும்் பட்டிமன்ற நகைச்சுவைை நடுவர் ஆதனூர் கோவி.தாமரைச்செல்வன் பொறியார்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி, விருது வழங்கி பேசினார். ஞானபீடம் விருதை  தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், கல்வி திலகம் விருதை ஆசிரியர் ராமநாதன் ஆகியோர் பெற்றனர்.இதில் சேதுபாவாசத்திரம் வட்டார முருத்துவ அலுவலர் ராமலிங்கம், நிர்வாக அலுவலர் ஆனந்தன், கிளப் உறுப்பினர்கள் நல்லச்சாமி, தமிழ்செல்வன், ராமமூர்த்தி, வைரவன், சம்சுதீன் தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவநாதன் நன்றி கூறினார்.