லஞ்ச புகாரில் சிக்கிய, வரித்துறை அதிகாரிகள், 21 பேருக்கு, கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி..!

Scroll Down To Discover

பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு, லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் படி மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் முதல் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து பணியில் இருந்து நீக்கி வருகிறது.

வருமான வரித்துறையில் பணியாற்றிய குரூப் பி தரத்திலான 21 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் பெற்ற போது சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்கள்.ஊழல் உள்ளிட்ட புகார்களில் சிக்கி, சிபிஐ விசாரணை எதிர்கொண்டுள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5வது முறையாக இது போன்று அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உயர் பதவிகளில் வகித்த 64 அதிகாரிகள் உள்பட மொத்தம் 85 பேருக்கு இதுவரை கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பிரதமர் மோடி, வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.