லஞ்சம் பெற்ற வழக்கு.. பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி கைது – அமலாக்கதுறை விசாரணை..!

Scroll Down To Discover

அரியானா மாநில பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சுதிர் பர்மர். இவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிபதி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குருகிராமில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் சுதிர் பர்மரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) நீதிபதி சுதிர் பர்மரை கைது செய்துள்ளதாக அமலாக்க துறை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தன.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என அமலாக்க துறை தெரிவித்துள்ளது.