ரோடோமைன்-பி ரசாயனம் – கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்தது கர்நாடக சுகாதாரத்துறை..!

Scroll Down To Discover

மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.