தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2022 ஆம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் செயலடும் ரேஷன் கடைகளுக்கு 2022 ஆம் ஆண்டிற்க்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் பின்வரும் நாட்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பொங்கல் (ஜனவரி 14, வெள்ளிக்கிழமை)
2. தைப்பூசம் (ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை)
3. குடியரசு தினம் (ஜனவரி 26, புதன்கிழமை)
4. தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்/மகாவீரர் ஜெயந்தி (ஏப்ரல் 14, வியாழக்கிழமை)
5 உழைப்பாளர் தினம் (மே 1, ஞாயிற்றுக்கிழமை)
6. ரம்ஜான் (மே 3, செவ்வாய்க்கிழமை)
7. சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15, திங்கட்கிழமை)
8. விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 31, புதன்கிழமை)
9. காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை)
10. விஜயதசமி (அக்டோபர் 5, புதன்கிழமை)
11. தீபாவளி (அக்டோபர் 24, திங்கட்கிழமை)
12. கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை)
Leave your comments here...