ரூ 1.76 லட்சம் கோடி கடன் அனுமதியுடன் கூடிய 187.03 லட்சம் விவசாயி கடன் அட்டைகளுக்கு ஒப்புதல்.!

Scroll Down To Discover

விவசாயி கடன் அட்டைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் 2020 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ரூ 1.76 லட்சம் கோடி கடன் அனுமதியுடன் கூடிய 187.03 லட்சம் விவசாயி கடன் அட்டைகளுக்கு 2021 ஜனவரி 29 வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை பொதுத் துறை வங்கிகளும், நபார்டும் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.