ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!

Scroll Down To Discover

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த ஆக.,05ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மகான்த் நிரித்ய கோபால் தாஸ் என 5 பேர் மட்டுமே மேடையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மகான்த் நிரித்ய கோபால் தாஸ்க்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேடையில் அவருடன் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், வளாகத்திலிருந்த மதகுருக்களில் ஒருவருக்கும், 14 காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.