ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தது இலங்கை அரசு..!

Scroll Down To Discover

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை அரசு நிபந்தனையுடன் விடுதலை செய்தது. கடந்த 8ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவில் மீன்பிடித்துவிட்டு 9ம் தேதி அதிகாலையில் கரை திரும்பும்போது கச்சத்தீவுக்கும் – நெடுந்தீவுக்கும் இடையில் இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களையும், ஒரு படகையும் சிறை பிடித்திருந்தனர். எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இன்று இந்த வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன், தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் தெரிந்தே இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கின்றனர். அதுமட்டுமின்றி இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இலுவரையை கொண்டு மீன்பிடிக்கிண்றீர்கள். இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தாங்கள் மனிதாபிமான முறையில் மீனவர்களை விடுதலை செய்கின்றோம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இலங்கை வசம் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.