ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது – அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு

Scroll Down To Discover

2019ல் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்து மூன்று மாதத்திற்குள் கோயில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது. அயோத்தியில் ஆக., 5ம் தேதி பூமி பூஜை நடக்கிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கு ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: அரசியல் சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்த பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றால், அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகி விடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பற்ற தன்மை தான். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.