ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்
உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரயு நதிக்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியுள்ளது.
Live from Ayodhya. https://t.co/cHp9fTFEdx
— Narendra Modi (@narendramodi) August 5, 2020
உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. இந்த தருணம் வரும் என கோடிக்கணக்கான மக்கள் நம்பவில்லை. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. குழந்தை ராமர் பல ஆண்டுகளாக குடிசையில் வைக்கப்பட்டிருந்தார். ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.ஆக., 15 லட்சக்கணக்கான இந்தியர்களின் தியாகத்தை குறிக்கிறது. அதேபோல், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் போராடியுள்ளனர். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. பெரு மகிழ்ச்சியுடன் இன்றைய நிகழ்ச்சியை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். ராமர், தினமும் நமக்கு முன்மாதிரியாக உள்ளார்.
ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. குமரி முதல் நாடு முழுவதும் ராமர் கீதம் ஒலிக்கிறது. தங்கமயமான அத்தியமான துவங்கியுள்ளது. நமது கலாசாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோயில் திகழும் ராமர் கோவில் பல வாய்ப்புகளை அளித்துள்ளது. ராமர் பாலத்திற்கு கற்கள் வந்தது போல், ராமர் கோவில் கட்டவும் மணல், செங்கல், புனித நீர் வந்துள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைதது தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம். வேற்றுமையில் ஒற்றுமையை ராமர் கோயில் எடுத்து காட்டுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நடந்த இந்த விழா மற்ற விழாக்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. தமிழில் கம்ப ராமாயணம் போன்று, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு மஹாத்மா காந்திக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தது போல், தற்போது, ராமர் கோவிலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளர். ராமரை பல்வேறு நாடுகளிலும் வழிபடுகின்றனர். தாய்லாந்து, மலேஷியா, லாவோஸ் நாடுகளிலும் ராமரை வழிபடுகின்றனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியாவிலும் ராமாயணம் உள்ளது
Leave your comments here...