ராமரின் தாய்க்கு மிகப் பெரிய கோவில் கட்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு திட்டம்..!

Scroll Down To Discover

ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே, ராமரின் தாய் கவுசல்யாவின் கோவில் உள்ளது.

ஏற்கனவே உள்ள கோவில், தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. கோவில் வளாகத்தை புதுப்பித்து அழகுபடுத்த, காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார்.


ராமர் வனவாசம் இருந்த போதும், சத்தீஸ்கரின் பல பகுதிகள் வழியாக சென்று உள்ளதாக, புராண கதைகள் கூறுகின்றன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட, ஒன்பது இடங்களை, சுற்றுலா தலங்களாக்க, ஏற்கனவே மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கவுசல்யா பிறந்த, சத்தீஸ்கரில் உள்ள அவருடைய கோவிலை புனரமைக்க, முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார்.