இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று ரயில்வே துறை. இதில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் இது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறை தனியார் மயமாகாது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ரயில்வே சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, ரயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தவறான கருத்து. ரயில்வே தனியார் மயமாகாது. இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.
Leave your comments here...