‘ரபேல்’ விமான ஒப்பந்தத்தில் பணம் கைமாறியதாக தகவல்

Scroll Down To Discover

2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து நம் விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் மோசடி நடந்ததாக, காங்., எம்.பி.,ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின், 2017ம் ஆண்டுக்கான கணக்குகளை ஆய்வு செய்ததில், மொத்தம், 8.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த ஆயுத இடைத் தரகர் சுஷேன் குப்தாவின், ‘டெப்சிஸ் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.4.31 கோடி கொடுத்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த பணம் ரபேல் போர் விமானங்களின் மாதிரிகள், 50ஐ தயாரிக்க, சுஷேன் குப்தா நிறுவனத்துக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மாதிரிகள் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் பிரான்ஸ் லஞ்ச தடுப்பு பிரிவின் அறிக்கைகளை, பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.