ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 66 ஏ பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் : மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!

Scroll Down To Discover

ரத்து செய்யப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 66 ஏ பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என்று தங்களது ஆளுகையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

2015 மார்ச் 24 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை பின்பற்றுமாறு சட்டத்தை செயல்படுத்தும் முகமைகளை அறிவுறுத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 66 ஏ பிரிவின் கீழ் வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஷ்ரேயா சிங்கல் மற்றும் இந்திய அரசுக்கு இடையேயான வழக்கில் 2015 மார்ச் 24 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில், தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 66 ஏ பிரிவை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து இச்சட்டப்பிரிவு செல்லாததாகி உள்ளது. எனவே, 2015 மார்ச் 24 முதல் இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.