வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தலைவர் 168’என்று அப்போதைக்குக் குறிப்பிடப்பட்ட இப்படத்துக்கு இசை-இமான், கீர்த்திசுரேஷ்,பிரகாஷ் ராஜ்,குஷ்பு,மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள்.
டிசம்பர் இரண்டாவது வாரம் பூஜை நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/sunpictures/status/1231919203529023488?s=20
படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கத்தில் சிறு விடியோ ஒன்றுடன் திங்கள் மாலை படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Leave your comments here...