யானை கொல்லப்பட்ட விவகாரம் ; வெடி பொருளை சாப்பிட வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Scroll Down To Discover

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான 1கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து மக்கள், யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர்.பழத்துக்குள் வெடிமருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை, அதனைவாங்கிச் சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பழம் வெடித்து தாங்க முடியாத வலியை அனுபவித்துள்ளது கர்ப்பிணி யானை. இறுதியில் அங்குள்ள நதி நீரில் நின்றபடியே தனது குட்டியுடன் உயிரை விட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க எம்.பியும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, இதைக் கொலை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “இது போன்ற சம்பவங்களுக்கு மலப்புரம் மிகவும் பிரபலம். இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. உதாரணமாக சாலைகளில் விஷங்கள் தூவுவார்கள். இதன் மூலம் நூற்றுக்கணக்கான பறவைகள், நாய்கள் இதன் மூலம் ஒரே நேரத்தில் கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கும் என கூறியுள்ளார்


கேரள முதல்வர் பினராயி விஜயன், “கர்ப்பிணி யானையின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கேரள வனத்துறை இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.


இந்த நிலையில் யானை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்:- கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். மலப்புரத்தில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அது தொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன்” வெடி பொருளை சாப்பிட வைத்து கொல்வது இந்திய கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்தார்