மோடியின் 70 வது பிறந்தநாள் : பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு துவக்கம்.!

Scroll Down To Discover

புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை யொட்டி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழிகாட்டுதலின்படி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி.ஆர்.கணேசன் தலைமையில் நகரத்தலைவர் சுப்பிரமணியன்,பொதுச்செயலாளர் லெட்சுமணன் முன்னிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி 70 பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக நிலையங்களில் செல்வமகள் திட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.250 வீதம் தானேசெலுத்தி 70 பெண்குழந்தைகளுக்கு புதிதாக சேமிப்பு கணக்கை ஏவிசிசி.ஆர்.கணேசன் தொடக்கிவைத்தார்.

பாரதப் பிரதமர் மோடி மோடியின் 70 வது பிறந்த நாளை10நாட்கள் பிரம்மோற்சவ விழா கொண்டாடி வருகின்றனர்.பிரதமர் மோடியின் பெயருக்கு அனைத்து ஆலயங்களிலும் சிறப்புவழிபாடு நடத்தினர். இதில் பாஜக நிர்வாகிகள் திறளாக பங்கேற்றனர்.