மோசமான வானிலை : கடும் பனிப்பொழிவு – சிக்கிமில் 70 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

Scroll Down To Discover

மோசமான வானிலை காரணமாக சிக்கிமில் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

சிக்கிமின் குபுப் மற்றும் நாதங்கில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி அங்கு சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டனர்.

இதையடுத்து, ‘ஆபரேஷன் ஹிம்ரஹத்’ எனும் மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ், நேற்று குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 70 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு போதிய உணவு, உடை, இருப்பிட வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து, ‘ஆபரேஷன் ஹிம்ரஹத்’ குழுவுக்கு இந்திய ராணுவம் பாராட்டு தெரிவித்துள்ளது.