மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் 130 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் ஜல்பைகுரி சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலை மேலும் மோசமானதால் நார்த் பெங்கால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். யாருக்கும் அனுமதி மறுக்கப்படாத அளவு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...