மும்பை தாக்குதல் : பயங்கரவாதி தஹவூர் ராணாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை விசாரணை.!

Scroll Down To Discover

மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப் பட்டு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடா தொழிலதிபர் தஹவூர் ராணா, கடந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி, அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்ற தனி அறையில் நடக்கவுள்ள இந்த விசாரணையின் முடிவில்,தாவூர் ராணா நாடு கடத்தப்படுவாரா என்பது தெரியவரும். இதற்காக, இந்தியாவில் இருந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அமெரிக்கா வந்துள்ளனர்.