முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்த நாள் : அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Scroll Down To Discover

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த தினம் இன்று , தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் வாஜ்பாயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “வாஜ்பாய் இந்தியாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றார். வலுவான மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1342300505624571905?s=20