முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 1, 2021) “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினம்” கடைபிடிக்கப்படும்.
முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக ஆகஸ்ட் 1, 2019 அன்று அரசு சட்டம் இயற்றியதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு முத்தலாக் வழக்குகள் கணிசமாக குறைந்திருப்பதாக நக்வி தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ளனர். “இஸ்லாமிய பெண்கள் உரிமை தினத்தை” நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் கடைபிடிக்கும்.
இந்த தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் ஆகியோருடன் புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தநக்வி கலந்துக் கொள்வார்.
முத்தலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்களின் “தற்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை” அரசு வலுப்படுத்தியிருப்பதுடன், அவர்களது அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக நக்வி குறிப்பிட்டார்.
Leave your comments here...