முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் இயக்குனர் போஸ் வெங்கட்..!

Scroll Down To Discover

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்க உள்ளதாக நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

கன்னி மாடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்துள்ள நடிகர் போஸ் வெங்கட் அடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தில் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் உள்ளாக்கப்பட்ட நெருக்கடிகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகும் என்றும் ஒரு தலைவனாக மு.க.ஸ்டாலின் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளை இந்த திரைப்படம் பேசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை எழுதும் பணிகளை அஜயன் பாலா மேற்கொண்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக படக்குழு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இந்தத் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சமுத்திரக்கனி இந்த திரைப்படத்தில் முக்கிய பங்காற்ற உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.