மின்துறை சீர்திருத்தங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு..!

Scroll Down To Discover

2021-2022-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை ரூ.28,204 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி அதிகபட்சமாக தமிழகத்துக்கு ரூ.7,054 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்துக்கு ரூ.6,823 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.5,186 கோடியும் வழங்கப்படுகிறது.

15-வது நிதிக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன் வழங்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. 2022-2023-ம் ஆண்டில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மாநிலங்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,22,551 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.